Sharing is caring!

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசனுக்கான 5 வது நாள் ப்ரோமோவில், விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே கடும் வாக்குவாதம் நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸ் 7ம் சீசன்:

பிக்பாஸ் 7ம் சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி மிகவும் பிரம்மாண்டமாக முறையில் தொடங்கி இருக்கிறது. இந்த முறை சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். இந்த வார நாமிநேஷன் லிஸ்டில் ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப், பவா செல்லத்துரை, ஐஷு,அனன்யா, ரவீனா ஆகிய 7 பேர் இருக்கிறார்கள். வழக்கம் போல் இல்லாமல், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

Leo Movie Trailer: 2 மணி நேரத்தில் மாஸ் காட்டிய விஜய்..! ரத்தம் சொட்ட…சொட்ட தெறிக்க விடும் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர்..!

முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் இடையே பிரச்சனை:

கடந்த 6 சீசன்களிலும் சில நாட்களுக்கு கழித்து தான் சண்டை, சச்சரவுகள் இருக்கும். ஆனால், இந்த சீசனில் வழக்கம் போல் இல்லாமல் முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் இடையே பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரதீப் ஆண்டனி துவங்கி, சுமால்பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா வரை ஏகப்பட்ட சர்சைகளில் சிக்கியுள்ளனர். அதனால், இந்த வார முடிவில் கமல் இவர்களை வெளுத்து வாங்க போவது உறுதி.

முன்னதாக, சக போட்டியாளர்களிடம் பேசிய ஜோவிகா ”தனக்கு படிப்பு வரவில்லை என்பதால், 9 ஆம் வகுப்புடன் நின்று விட்டேன்.என்னுடைய குடும்பத்திலும் நிறைய பேர் சினிமா துறையில் இருப்பதாலும், எனக்கு சினிமா துறையில் ஆர்வம் இருந்ததாலும், சினிமா சம்மந்தமான டிப்ளமோ படிப்பு வரை படித்துள்ளேன்” என்றார். அப்போது, விசித்ரா குறுக்கிட்டு என்ன இருந்தாலும், 12 ஆம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். அதற்கு பிறகு, அவர்கள் வாழ்க்கையை அவரவர் முடிவு செய்து கொள்ளலாம் என்றார். அதற்கு பதில் கூறிய ஜோவிகா, என்னுடைய படிப்பை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றார்.

கதறி அழுத ஜோவிகா:

இதனை தொடர்ந்து, நேற்று வெளியான ப்ரோமோவிலும், ஜோவிகா ”என்னுடைய படிப்பு தொடர்பாக யாரும் பேசுறது எனக்கு பிடிக்கவில்லை. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது எந்த விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்றது கிடையாது. இங்கே வந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவது எனக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது” என்று கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

மேலும் படிக்க…Bigg Boss Tamil Season 7: இனி மேக்கப் போடக்கூடாது..! பிக்பாஸ் வைத்த அல்டிமேட் செக்..! மாட்டிக்கொண்ட பெண் போட்டியாளர்கள் ..!

கோவத்தில் சந்திரமுகியாக மாறிய ஜோவிகா:

இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் பேசும் விசித்ரா, ஜோவிகாவின் படிப்பு விஷயத்தில் நான் எதுவும் தலையிடவில்லை, அனைவருக்கும் 12 ஆம் வகுப்பு வரை கல்வி அவசியம் என்பதை பற்றி மட்டுமே கூறியிருந்தேன் என்றார். இதற்க்கு பதில் பேசிய ஜோவிகா, வாழ்வில் உயர்ந்தவர்கள் எல்லோரும் படித்து பட்டம் பெற்றவர்கள் கிடையாது. படிப்பு என்கின்ற விஷயத்தில் நிறைய குழந்தைகள் தப்பான வழியில் செல்கிறார்கள். மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை, என்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி நான் இங்கே வந்திருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க கூறினார். அதற்கு விசித்ரா என்ன வேணுனாலும் பேசுறது ‘பேச்சு சுதந்திரம்’ இல்லை என்றார். இப்ப தப்பா எதாவது சொன்னேனா..? என்று சக போட்டியாளர்களை பார்த்து ஆக்ரோஷமாக ஜோவிகா கேட்கிறார். அதற்கு மற்ற போட்டியாளர்கள் இல்லை என்று தலையசைத்து, கைத்தடியும் வரவேற்கிறார்கள்.

மேலும் படிக்க…Bigg Boss Tamil Season 7: இனி மேக்கப் போடக்கூடாது..! பிக்பாஸ் வைத்த அல்டிமேட் செக்..! மாட்டிக்கொண்ட பெண் போட்டியாளர்கள் ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசனுக்கான 5 வது நாள் ப்ரோமோ…

இதையடுத்து வெளியான அடுத்த ப்ரோமோவில், விசித்ரா தமிழ் உனக்கு எழுத தெரியுமா..? என்று கேட்கிறார். அதற்கு ஜோவிகா நான் தமிழ் படிக்கவில்லை. அது எனக்கு தெரியவில்லை என்று தான் படிப்பை நிறுத்தினேன். பிறகு ஏன் அதை பத்தி பேசுறீங்க என்றார். மீண்டும் விசித்ரா, உங்க அம்மா சொன்னா நீ கேட்க மாட்டியா ..? என்றார். அதற்கு ஜோவிகா, ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது நான் தான், என் அம்மாவோ, தாத்தாவோ..பாட்டியோ இல்லை…இங்கே வந்தால் என்னை பத்தி மட்டும் பேச வேண்டும்’ என்று ஆக்ரோஷமாக கத்தி பேசுகிறார். இதை பார்த்து விசித்ரா மிரண்டு போய் பார்க்கிறார்.

(Visited 14 times, 1 visits today)

Sharing is caring!