Sharing is caring!

பிக்பாஸ் சீசன் 7 நிகச்சியின் திடீர் திருப்பமாக, இந்த இரண்டாவது வாரம் நாமினேஷனால், வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பது தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: இந்த வாரத்தின் முதல் எலிமினேஷன் இந்த போட்டியாளரா..? வெளியான திடீர் திருப்பம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் கடந்த வாரம் துவங்கி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ‘டாஸ்குகள்’ கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் மத்தியில் கடும் வாக்குவத்தை துவங்கியது பிக்பாஸ். மற்ற சீசன்களை போல் அல்லாமல், இந்த முறை இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் விதிகளின் படி, கேப்டனை குறைவாக கவர்ந்தவர்கள் என்ற வீதத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு 6 போட்டியாளர்களை கேப்டன் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். அதுமட்டுமின்றி, ஸ்மால்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எந்த டாஸ்கிலும் கலந்து கொள்ள கூடாது. மேலும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே, கிச்சன் கிளீனிங் முதல் பாத்ரூம் கிளீனிங் வரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.

மீதம் 17 போட்டியாளர்கள் உள்ளனர்:

கடந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷன் லிஸ்டில் ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப், பவா செல்லத்துரை, ஐஷு,அனன்யா, ரவீனா ஆகிய 7 பேர் இருந்தார்கள். இவர்களில் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று, பிக்பாஸ் சீசன் 7ன் முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறியுள்ளார். இதனால், தற்போது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 17 போட்டியாளர்கள் உள்ளனர். அனன்யா வெளியேறியதற்கு அவருடன் ரசிகர்கள் இணையத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து பவா செல்லதுரை வெளியேறியுள்ளார்:

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றுமொரு ஷாக்கிங் செய்தியாக, தற்போது எழுத்தாளர் பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து அவர், தன்னால் நெஞ்சு வலி காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை என்று பிக்பாஸிடம் முறையிட்டார். இதையடுத்து, பிக்பாஸ் அவருக்கு ஒரு நாள் இரவு அவகாசம் கொடுத்து அனுப்பி வைத்தது. இதையடுத்து, இன்று காலை பிக்பாஸிடம் மீண்டும் முறையிட்ட பவா தன்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

இரண்டாவது வாரம் நாமினேஷன் டிவிட்ஸ்ட்:

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான நாமினேஷன் ப்ரோமோ வெளியானது. இதில், அதிகம் நபர்கள் விஷ்ணுவின் பெயரை கூறி நாமினேட் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்த வீடுமே தனக்கு எதிராக இருப்பதாக விஷ்ணு கூறுவது போன்ற காட்சிகள் காட்டப்படுகிறது.

டார்கெட் செய்யப்படும் விஷ்ணு மற்றும் மாயா:

இதைத் தொடர்ந்து நாமினேஷனில் அதிகம் சொல்லப்படும் பெயராக மாயா கிருஷணன் உள்ளார். குறிப்பாக ரவீனா, மாயா கிருஷ்ணன் இந்த வீட்டில் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார்கள் என்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அடுத்ததாக அக்‌ஷயாவை ‘நாமினேட்’ செய்த போட்டியாளர்களில் ஒருவரான விஷ்ணு, அக்‌ஷயா பிக்னிக் வந்தது போல் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக காரணம் கூறுகிறார்.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: தமிழ் எழுத தெரியுமா..? படிப்பை பற்றி விசித்ரா கூறிய விஷயம்.! கோவத்தில் ஒரு நிமிடம் சந்திரமுகியாக மாறிய ஜோவிகா..! அல்லு விட்ட பிக்பாஸ் வீடு ..!

(Visited 45 times, 1 visits today)

Sharing is caring!