Bigg Boss 7 Tamil Elimination: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசனில் முதல் வாரம் எலிமினேட் ஆகியுள்ளது யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி விறுவிறுப்பாக துவங்கிய நிலையில், முதல் நாளில் இருந்தே ஆட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கடந்த 6 சீசன்களிலும் ஒரு வாரம் சென்ற, பிறகு தான் பிரச்சனைகள் ஆரம்பமாகும். ஆனால், இந்த சீசனில் முதல் வாரம் முடிவதற்கு முன்பே ஏகப்பட்ட சண்டை, சச்சரவுகள் என பிக்பாஸ் வீடு கலவர பூமியாக மாறியுள்ளது. அதனால், இந்த வார முடிவில் கமல் என்ன பேச போகிறார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த 7வது சீசனில் 18 போட்டியாளர்கள்:
இந்த 7வது சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசனில் மட்டும் இரண்டு வீடுகளாக பிக்பாஸ் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் கேப்டனாக தேர்தெடுக்கப்படும் நபருக்கென்று சில சலுகைகள் வழங்கப்படும். அதில் ஒன்றாக, கேப்டனை குறைவாக கவர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், சுமார் 6 போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
ஸ்மால் பாஸ் வீட்டில் 6 பேர்:
அதன்படி, இந்த வாரத்தின் கேப்டனாக இருக்கும் விஜய் வர்மாவை கவராத போட்டியாளர்கள் என வினுஷா தேவி, அனன்யா ராவ், நிக்ஸன், பவா செல்லதுரை, ரவீனா தாஹா, ஐஷூ ஆகிய 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து, விதிமுறைகளை மீறிய காரணத்தால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர்.
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் 7 பேர்:
அதேபோல், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு ஓட்டு போட வேண்டும். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பது பிக்பாஸ் விதிமுறைகளில் ஒன்று. அதனடிப்படையில், இந்த வார நாமிநேஷன் லிஸ்டில் ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப், பவா செல்லத்துரை, ஐஷு,அனன்யா, ரவீனா ஆகிய 7 பேர் இருக்கிறார்கள்.
இந்த வாரம் எலிமினேஷன் இவரா..?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகளின் படி, ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். மக்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையில் இந்த வெளியேற்ற நிகழ்வு நடக்கும். இந்நிலையில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் 7-வது சீசனின் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறியுள்ளார்.