Leo Box Office Collection: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான லியோ திரைப்படம் முதல் நாள் வசூலில் 100 கோடியை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
நட்சத்திர பட்டாளங்கள்:
லியோ திரைப்படம், விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில், தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பகத் பாசில் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் லியோ:
நேற்று வெளியான இந்த லியோ திரைப்படம் சில விமர்சனங்களை சந்தித்தாலும், விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் படமாக உள்ளது. இந்நிலையில், லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, லியோ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம் முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்றாலும், முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் லியோ திரைப்படம் ரூ. 34 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் அதிரடி வசூல் வேட்டை:
நடிகர் விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.11 கோடி வசூல் செய்திருக்கிறது. இதுதவிர ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் லியோ படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.
அதேபோல், லியோ படத்திற்கு வெளிநாட்டில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. வரும் நாட்களில் ஆயுத பூஜை விடுமுறைகள் உள்ளதால் படத்தின் வசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ப்ளாக்பஸ்டர் ஹிட்’ அடித்த லியோ:
விஜய் கேரியரில் முதல் நாளில் ரூ 100 கோடியை கடந்து வசூல் செய்த முதல் திரைப்படம் மற்றும் தமிழ் சினிமாவின் 3 வது படம் என்ற புதிய சாதனையை லியோ படைத்துள்ளது. இதனால், படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். ‘ப்ளாக்பஸ்டர் ஹிட்’ அடித்த லியோ திரைப்படம் விரைவில் வசூலில் 1000 கோடியை கடக்கும் என்று படக்குழு கூறியுள்ளது. இதனை விஜய் ரசிர்கள் கொண்டாடி வருகின்றனர்.