
Bigg boss 7 Tamil: முதல் வாரத்தின் முடிவில் அனன்யா வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், பவா செல்லத்துரை தானாக முன்வந்து வீட்டிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று பிக்பாஸ் நிகழ்ச்சி தெரிவித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி விறுவிறுப்பாக துவங்கி, ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஆண் போட்டியாளர்கள் 9 மற்றும் பெண் போட்டியாளர்கள் 9 என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மற்ற சீசன்களை போல் அல்லாமல், இந்த முறை இரண்டு வீடுகளாக பிக்பாஸ் பிரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மால் பாஸ் வீட்டிற்கு விதிமுறை:
பிக்பாஸ் விதிகளின் படி, கேப்டனை குறைவாக கவர்ந்தவர்கள் என்ற வீதத்தில்,ஒவ்வொரு வாரமும் 6 போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எந்த டாஸ்கிலும் கலந்து கொள்ள கூடாது. அதேபோல், கிச்சன் கிளீனிங் முதல் பாத்ரூம் கிளீனிங் வரை வீட்டின் மொத்த வேலைகளும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் பார்க்க வேண்டும்.

முதல் வாரத்தின் முடிவில் அனன்யா எலிமினேஷன்:
இதில் முதல் வாரத்தின் முடிவில் அனன்யா வீட்டிலிருந்து வெளியேறினார். 18 போட்டியாளர்களில் எழுத்தாளர் பவா செல்லதுரை பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு போட்டியாளராக நுழைந்தவர். தான் ஒரு எழுத்தாளர் என்பதால் ஆரம்பத்தில் இருந்து தனக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம் போட்டியாளர்களிடம் கதைகள் மூலம் பகிர்ந்து வந்தார். இவர் கூறும் கதைகள் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் செம்ம வைரலாகவே, பிக்பாஸ் வீட்டில் இவர் நீண்ட நாள் இருப்பார் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது :
இந்த நிலையில், பவா செல்லதுரை தனக்கு நெஞ்சு வலிக்கிறது, இனிமேல் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி, தானாக முன்வந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள்:
முன்னதாக, இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில், ஜோவிகா, மாயா, பூர்ணிமா, பிரதீப், விசித்ரா,விஷ்ணு ஆகியோர் பெயர் இருந்தது. இதில்,பிரதீப்பிற்கு அதிக வாக்குகள் இருக்கிறது. குறைவான வாக்குகளை பெற்று மாயா கடைசி இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.