Sharing is caring!

Latest Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 3 வாரத்தை கடந்து 18 போட்டியாளர்களுடன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேறு எந்த சீசனிலும் இல்லாமல் இந்த முறை ‘இரண்டு வீடு கான்செப்ட்’ கொண்டு வரப்பட்டது. இதில், கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படும் நபர், பிக்பாஸ் வீட்டில் இருந்து 6 பேரை தேர்வு செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அத்துடன், ஸ்மால் பாஸ் வீட்டார் எந்த விதமான டாஸ்கிலும் பங்கேற்க முடியாது. மேலும், சமையல் வேலை முதல் பாத்ரூம் கழுவது உள்ளிட்ட வீட்டின் அனைத்து வேலைகளையும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும் என்பது பிக்பாஸ் விதிமுறை.

மேலும் படிக்க…பிக்பாஸ் வீட்டில் அடிதடி, சண்டை…பிரதீப்பிற்கு மண்டையில் அடி… விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு..! வைரல் வீடியோ..!

ஸ்மால் பாஸ் வீட்டில் 6 பேர்:

அதன்படி, இந்த வாரத்தின் கேப்டனான யுகேந்திரன் பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், விஷ்ணு, பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகிய 6 பேரை ஸ்மால்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அதேபோல், விதிமுறைப்படி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும்.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில்:

அதன்படி, இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில், நிக்சன், அக்‌ஷயா, மணி சந்திரா, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க…பிக்பாஸ் வீட்டில் அடிதடி, சண்டை…பிரதீப்பிற்கு மண்டையில் அடி… விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு..! வைரல் வீடியோ..!

ஒரே வாரத்தில் இரண்டு பேர் வெளியேறினார்கள்:

பிக்பாஸ் வீட்டின் முதல் வாரத்தில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா ராவ் வெளியேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தனக்கு நெஞ்சு வலிக்கிறது தன்னால் இங்கு இருக்க முடியாது என்று கூறி ‘பவா செல்லத்துரை’ தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனால், இரண்டாவது வாரத்தில் ‘நோ எலிமினேஷன்’ என்று பிக்பாஸ் அறிவித்தது.

போட்டியாளர்கள் மத்தியில் அடிதடி சண்டை:

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ‘டாஸ்குகள்’ கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் மத்தியில் கடும் வாக்குவத்தை துவங்கியது பிக்பாஸ். இதையடுத்து, தற்போது பிக்பாஸ் வீட்டின் மூன்றாவது வாரத்தில், டாஸ்குகள் எல்லாம் கடுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டியாளர்கள் மத்தியில் அடிதடி சண்டை எல்லாம் ஏற்பட்டது.

இந்த வாரம் எலிமினேஷன்:

இந்த வார ஓட்டிங் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன்படி, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை விணுஷா தான் இந்த வாரம் வெளியேறப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் மத்தியில் தன்னை பெரிய அளவில் வெளிப்படுத்தி கொள்ளாத ‘விணுஷா’ இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இருப்பினும், வார இறுதியில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க…பிக்பாஸ் வீட்டில் அடிதடி, சண்டை…பிரதீப்பிற்கு மண்டையில் அடி… விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு..! வைரல் வீடியோ..!

(Visited 49 times, 1 visits today)

Sharing is caring!