Sharing is caring!

Leo OTT Release Date: தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளியான லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க…விஜய் கேரியரில் முதல் நாள் வசூலில் 100 கோடியை கடந்து…புதிய சாதனை படைத்த லியோ..!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் உலகளவில் வெளிவந்த திரைப்படம் லியோ. லலித் குமார் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

நட்சத்திர பட்டாளங்கள்:

இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பகத் பாசில் மற்றும் சஞ்சய் தத், ஜார்ஜ் மரியன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

மேலும் படிக்க…விஜய் கேரியரில் முதல் நாள் வசூலில் 100 கோடியை கடந்து…புதிய சாதனை படைத்த லியோ..!

வசூலில் 500 கோடியை கடந்து சாதனை:

இப்படம் விமர்சன ரீதியாக பின்தங்கி இருந்தாலும், வசூலில் 500 கோடியை கடந்து பட்டையை கிளப்பி வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ்:

இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் தளம் பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்தில் படத்தை ஸ்ட்ரீம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது அதன்படி, வரும் நவம்பர் 21ம் தேதி முதல் லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் படு குஷியில் இருக்கிறார்களாம். எனினும், லியோ திரைப்படம் ஓடிடி வெளியீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடக்கத்தக்கது.

மேலும் படிக்க…விஜய் கேரியரில் முதல் நாள் வசூலில் 100 கோடியை கடந்து…புதிய சாதனை படைத்த லியோ..!

(Visited 27 times, 1 visits today)

Sharing is caring!