Wild Card Entry In BB House: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசனில், வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைவது சீரியல் நடிகை அர்ச்சனா என்ற தகவல் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன், பிரமாண்டமாக துவங்கி, ஹாட்ஸ்டார் தளத்தில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். வழக்கம்போல், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. இந்த முறை, இரண்டு வீடு கான்செப்ட் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்று பிக்பாஸ் வீடு என்றும், மற்றொன்று ஸ்மால் பாஸ் வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
ஸ்மால் பாஸ் வீட்டில் 6 பேர்:
இவர்களில், கேப்டனை குறைவாக கவர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், ஒவ்வொரு வாரமும் 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். அதன்படி, இந்த முறை, மாயா, விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, டான்ஸர் ஐஷூ, கூல் சுரேஷ், விஜய் வர்மா ஆகிய 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டுள்ளார்கள். இந்த சீசனில், குறைவான வாக்குகளை பெற்று முதல் போட்டியாளராக நடிகை அனன்யாராவ் வெளியேற்றப்பட்டார்.
இவருக்கு அடுத்தபடியாக, பவா செல்லத்துரை நெஞ்சு வலி காரணமாக தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்:
இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில், ஜோவிகா, மாயா, பூர்ணிமா, பிரதீப், விசித்ரா,விஷ்ணு ஆகியோர் பெயர் இருந்தது. இதில்,பிரதீப்பிற்கு அதிக வாக்குகள் இருக்கிறது. குறைவான வாக்குகளை பெற்று மாயா கடைசி இடத்தில் இருக்கிறார். எனவே, இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வைல்ட் கார்டு மூலம் அடுத்ததாக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்டிரி:
பிக்பாஸ் வீட்டில் வழக்கமாக இரண்டு வைல்ட் கார்ட் என்டிரி இருக்கும். இதில், முதல் வைல்ட் கார்ட் என்டிரியாக யார் உள்ளே வருவார்கள் என்று பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ராஜா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான தொகுப்பாளர் அர்ச்சனாவை வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே அனுப்ப பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.