Beauty tips for Eyebrow: அழகை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நம் எல்லோருக்கும் கூந்தல் கருமையாக இருப்பது போல், புருவமும் அடர்த்தியாக, கருமையாக இருக்க வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். ஆனால், சிலரின் புருவம் பார்ப்பதற்கு ஒல்லியாக தேய்ந்து போய் இருக்கும். நாம் கூந்தலை பராமரிப்பது போல புருவமும் சரியான விகிதத்தில் வைத்திருந்தால் மட்டுமே, முகத்தின் அழகு கூடும்.
எனவே, நாம் இதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட, இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பயன்படுத்தினால், இதற்கான நல்ல தீர்வை நாம் நிச்சயம் பெற முடியும்.
முதலில் விளக்கெண்ணெய் இது உடல் உஷ்ணத்தை குறைத்து, கூந்தலுக்கு குளிர்ச்சியை தருவது போல் புருவ வளர்ச்சிக்கும் பெரும் பங்கு உதவுகிறது. ஆம், இதற்கு நீங்கள் தினமும் இரவில் தூங்கும் போது கண்களில் தடவி விட்டு தூங்க செல்ல வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும், குளிர்ந்த தண்ணீர் கொண்டு துடைத்து விட்டால் போதும், புருவத்தில் முடி வளர்வதை யாராலும் தடுக்கவே முடியாது.
இரவில் தூங்கும் போது வெங்காத்தை தட்டி அதில் சாறு எடுத்து, புருவத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். காலையில், எழுந்து ஈரமான காட்டன் துணி கொண்டு துடைத்து எடுத்தால், புருவம் அடர்த்தியாக வளரும். இப்படி செய்தால், வெங்காயத்தில் இருக்கும் சல்பர் என்னும் மூலக்கூறு உங்கள் புருவத்தின் முடியை தூண்டி விடும் தன்மை கொண்டது. இதே முறையில், கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். இவை உங்களுக்கு அப்ளை செய்யும் போதே குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது.
அதேபோன்று, விளக்கெண்ணெயுடன், வெங்காயச்சாறு, கற்றாழை ஜெல் சேர்த்து வாரம் இரண்டு முறை புருவம், கூந்தல் ஆகியவற்றில் தேய்த்து குளித்து வந்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இதனால், உங்கள் கண்ணிற்கு மற்றும் உடலுக்கு அதிக குளிர்ச்சியை தரும். புருவமும், அடர்த்தியாக மற்றும் கருமையாக இருக்கும்.