
Beauty Tips for Face at Home: வெயிலில் வெளியே சென்று வந்தால், முகத்தில் தூசி படிவதால், கருமை, வறட்சி போன்றவை தோன்றும். இவை நாளடைவில் முகப்பருக்களை உண்டு பண்ணும். அதிகப்படியான, மன அழுத்தம் காரணமாகவும் ஒருவருக்கு முகப்பருக்கள் தோன்றும் என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, நீரின்றி வறண்டு போன உங்கள் சருமத்தை, அழகாகவும், பொலிவாகவும் மாற்றும் ஒரு அற்புதமான குறிப்பு பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

கற்றாழை பேஸ் பேக்:
கொளுத்தும் வெயிலுக்கு கற்றாழை ஒரு சிறந்த ஒரு தீர்வாகும். இதற்கு அரை கப் அளவு கற்றாழை துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 1 டீஸ்பூன் பசும்பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ் பேக்கை போட்டு கொள்வதற்கு முன்பான, முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி நன்றாக துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கற்றாழை பேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவுங்கள். இப்படி, வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால், வறண்டு போன உங்கள் சருமம் பளபளப்பாக மாறும். மேலும், இந்த சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.
தவிர்க்க வேண்டியவை:

உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தால், கரடுமுரடான துணியால் உங்கள் முகத்தை துடைக்க வேண்டாம். இதனால், சருமத்தில் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படும்.
அதேபோல், முகத்தில் இருக்கும் பருக்களை கைகளால் கசக்கி விட வேண்டாம். இதனால், முகத்தில் இருக்கும் பருக்கள் வெடித்து மற்ற பகுதிக்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்கை வாழ்வது, முறையான உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலமும் முகப்பரு வருவதை தவிர்க்கலாம்.